துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "களத்தில் சந்திப்போம்". ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க, ராஜசேகர் இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் , பிரியா பவானி சங்கர் நடிக்க, காரைக்குடி செட்டியாராக "அப்பச்சி" என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.
இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது. கொரோனா பிரச்னையால் முடங்கி இருந்த படம் இப்போது வருகின்ற (தைப்பூசம்) ஜனவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .