தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகனாக அறிமுகமானவர் தமன். தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான கண்டசாலா பாலராமையாவின் பேரன் இவர். இசைக்குடும்பத்திலிருந்து வந்தவரான தமன் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு இசையமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.
தமிழில் தமன் இசையமைத்த 'ஈஸ்வரன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இசையமைத்த 'கிராக்' படம் பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 'காப்பி' என்ற சர்ச்சை எழுந்தது. தமன் மீது பொதுவாகவே காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் அடிக்கடி எழும். அப்படியான விமர்சனங்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் தமன்.
“சினிமா இசையில் பலரும் பங்கேற்பர். இயக்குனர்கள், பாடல் எழுதுபவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து நாங்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு டியூன் காப்பி என்றால் அது அவர்களுக்குத் தெரியாது. வேலையில்லாத மக்கள், இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரையில் என் மீது காப்பி அடித்தேன் என எந்த ஒரு காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்ட வேண்டும்,” எனக் கேட்டுள்ளார்.
'ஈஸ்வரன்' படப் பாடல்கள் எதுவும் காப்பி அடித்து உருவாக்கப்படவில்லை என்று நம்புவோமாக.