திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
தமிழ் சினிமாவில் ஏவிஎம் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக படங்களை தயாரித்துள்ள நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். இதன் நிறுவனர் ஆர்.பி.சவுத்திரி. இந்த நிறுவனத்தின் 90வது படமாக களத்தில் சந்திப்போம் தயாராகி உள்ளது. இதில் சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்.பி.சவுத்ரி அளித்த பேட்டி வருமாறு: எங்கள் நிறுவனத்தின் 90வது படம் களத்தில் சந்திப்போம். இதுவரை நாங்கள் குடும்ப பாங்கான படங்களையே தயாரித்து வந்துள்ளோம். ஆனால் இன்றைக்கு டிரண்ட் மாறிவிட்டது. அதனால் காலத்துக்கு ஏற்ப நாங்களும் மாறி இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் களத்தில் சந்திப்போம் படத்தை உருவாக்கி உள்ளோம். சூப்பர்குட் நிறுவனம் புதிய இயக்குனர்களை கொண்டுதான் அதிக படங்களை தயாரித்துள்ளது. அந்த வரிசையில் இப்போது என்.ராஜசேகரை அறிமுகப்படுத்துகிறோம்.
இதுவரை ஆண்டுக்கு 4 படங்கள் வரை தயாரித்தோம். இடையில் சிறிய கேப் விழுந்தது. காரணம் இப்போது படம் தயாரிப்பதை விட அதை வெளியிடுவது மிகவும் சிரமமான வேலையாக மாறிவிட்டது. படப்பிடிப்பு செலவும், நடிகர் நடிகைகளின் சம்பளமும் அதிகரித்து விட்டது. இப்போது எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இனி ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.
இந்த படம் தவிர வேறு இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறோம். இதில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன்ராஜா இயக்குகிறார். இது எங்களின் 93வது படமாகும்.
விஜய் எங்கள் ஹீரோ. அவருக்கு 6 சூப்பர் ஹிட் படங்களை எங்கள் நிறுவனம் கொடுத்துள்ளது. விரைவில் நாங்கள் 100வது படத்தை எட்டிவிடுவோம். 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்போம். அதில் விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அதற்கு முன்புகூட அவர் நடிக்கலாம் என்றார்.