ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் லூசிபர். மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் நடித்திருந்தனர் நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன் ராஜா இயக்குகிறார்.
இது சிரஞ்சீவியின் 153வது படமாகும். கொனிடல்லா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கம் ஐதராபாத் பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், கோபி அசந்தா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம். என்றார்.