பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

நிசப்தம் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்தார் அனுஷ்கா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து சகுந்தலம் என்ற படத்தின் கதையை கேட்டவர் அதில் நடிக்க மறுத்து விடவே, சமந்தா கமிட்டானார். தற்போது தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற படத்தை இயக்கிய பி.மகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அனுஷ்கா. முன்பு சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் பருமனை அதிகப்படுத்திய அனுஷ்கா இந்த படத்திற்காக தனது உடல்மொழியை மாற்றி நடிக்கிறாராம்.
வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனுஷ்காவை பார்க்கலாம் என்று டைரக்டர் மகேஷ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தை யு.வி.கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.