நவம்பர் மாதத்தில் ராஜமவுலி, மகேஷ்பாபு பட அப்டேட் | புதுப்பட டிரைலர் போல வெளியான 'கேப்டன் பிரபாகரன்' டிரைலர் | சூரி கிராமத்திற்குச் சென்று அன்பில் நெகிழ்ந்த ஐஸ்வர்ய லெட்சுமி | நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் | சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் |
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய்யின் 65ஆவது படத்தை 'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக அருண் விஜய்யும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கவில்லை. அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்றுமொரு முன்னணி நடிகரை இப்படத்தில் வில்லனாக நடிக்க பேசி வருகின்றனர்.
அதேசமயம் தளபதி- 65 என்ற டுவிட்டர் பக்கத்தில், 65வது படத்தின் பூஜை பிப்ரவரி முதல் வாரத்தில் நடப்பதோடு, 8-ந்தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதோடு, தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.