துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும்போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலாபால். அதே வேகத்தில் திருமண வாழ்க்கையில் இருந்தும் வெளியில் வந்தார். புதிய காதலர், தனிமை பயணம், மலையேற்றம் என ஜாலியாக இருந்து வந்த அமலாபாலின் வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிஷ்யை ஆகியிருக்கிறார். அங்கு தற்போது குண்டலினி யோகா கற்று வருகிறார். அதோடு பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் நிறைய பூனைகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: என்னை நான் குணப்படுத்துகிறேன், மாற்றுகிறேன் எனது வரம்புகள், அச்சங்கள் மற்றும் எனது கடந்தகால திட்டங்கள் அனைத்தும் இனி எனக்கு சேவை செய்யாது. நான் என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். நான் தயார். என்று எழுதியிருக்கிறார். திருமண வாழ்க்கையில் சறுக்கல், காதல் தோல்வி ஆகியவை அவரை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது.