போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலக் கதையாக உருவாகி வரும் இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அது படத்தின் வெளியீட்டு தேதியாக கூட இருக்கலாம் என நாம் சொல்லியிருந்தோம். ஆம் இப்போது அது உறுதியாகி உள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அக்., 13ல் படம் வெளிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர இன்னும் சில மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ''அக்., 13ல் நீரும், நெருப்பும் ஒன்றிணைந்து இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை, இந்திய சினிமாவின் மிகப்பெரிய, மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்க உள்ளது. சவாரி ஆரம்பம்'' என படக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஜுனியர் என்டிஆர் புல்லட்டிலும், ராம் சரண் குதிரையிலும் ஆக்ரோஷமாக சவாரி செய்கின்றனர். பின்னணியில் ஆர்ஆர்ஆர் என தலைப்பு இடம் பெற்றுள்ளது.