பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'சுசிலீக்ஸ்' சர்ச்சையில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தவர் பாடகி சுசித்ரா. சமீபத்தில் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த இவர் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார். இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் மீது குறை கூறி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுசித்ரா, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த பதிவை அழித்ததுடன், மற்ற யாரும் தனது சோஷியல் மீடியா பக்கத்தை பார்க்க முடியாதவாறு பிரைவேட் ஆகவும் மாற்றிவிட்டார்.
ஆனாலும் அவர் கமல் குறித்து பதிவிட்ட விஷயத்தை சிலர் சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். அதாவது பிக்பாஸ் சீசன்-4 நிறைவு நாள் நிகழ்ச்சி அன்று கமல் தனது சொந்த செலவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் காதி துணியால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை வழங்கி அவற்றை அணிந்து வர செய்தார்.. காதி துணிக்கு மீண்டும் வியாபார மதிப்பை ஏற்படுத்தும் முயற்சி இது என்றும் கமல் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது கமல் குறித்தும் இந்த ஆடை குறித்தும் தான் விமர்சித்துள்ளார் சுசித்ரா. அதாவது, 'பப்பட் மாஸ்டர் = கமலும் அவரது முட்டாள்தனமான பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் அந்த வீடும்.. எனக்கு கொடுக்கப்பட்டது. சிந்தடிக் உடை தான்.. ஆனால் காதி என்று அதை சொல்லச் சொல்லித் தான் கொடுத்தார்கள். என்ன அருவருப்பான மனிதர்கள்.. கமல்ஹாசன் ஒரு கடவுள் அல்ல.. அவரே கையாலாகாத ஒரு மனிதன் தான்” என விமர்சித்துள்ளார் சுசித்ரா..இதுபோன்று இன்னும் சில பதிவுகளையும் வெளியிட்ட சுசித்ரா அவை அனைத்தையும் அழித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.