டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அடிக்கடி பாலியல் புகார்களை கிளப்பும் பாடகி சுசித்ரா, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவர் ஏற்கெனவே விஷால் மீது பல புகார்களை கூறியுள்ளார். தற்போது விஷால் உடல்நலக்குறைவாக இருக்கிறார். அண்மையில் நடந்த மத கஜ ராஜா பட விழாவில் விஷால் உடல் நலிந்த நிலையில் கைகள் நடுங்கும் நிலையில் கலந்து கொண்டார். இது வைரல் ஆனது. இந்த நிலையில் விஷால் மது பாட்டிலுடன் தவறான எண்ணத்தில் தன் வீட்டு கதவை தட்டியதாகவும், அதனால் எனக்கு மகிழ்ச்சி என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை கூறுகிறேன். எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி விடுவார். ஒருநாள் கார்த்திக் இல்லாதபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
கதவை திறந்து பார்த்தால் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும்போதே தெரிந்தது. உடனே கார்த்திக் குமார் இல்லையா என்று கேட்க, நான் இல்லை என்றேன். உடனே நான் உள்ளே வரவா என்று விஷால் கேட்டார். நான் 'நோ' என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் கையில் இருக்கும் ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி இதற்காகத்தான் வந்தேன் என்றார். கார்த்திக் குமார் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வந்து எனக்கு ஒயின் பாட்டிலை கொடுத்தார்.
நான் அதை வாங்காமல் கவுதம் மேனன் அலுவலகத்தில்தான் கார்த்திக் குமார் இருக்கிறார், அங்கேபோய் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கெட்டவார்த்தையால் அவனை திட்டினேன். அது அவன் காதில் விழாதது போல் என்ன சொன்னீங்க என்றதும், இங்கே ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும் நீங்க போங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டேன். அன்று தவறான எண்ணத்துடன் மது பாட்டிலை பிடித்த கைகள்தான் இன்று நடுங்கியபடி காட்சி தருகிறது. இது எனக்கு சந்தோஷம்தான். என்று சுசித்ரா கூறியுள்ளார்.