2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரானோ தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது.
இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு வெளிவந்த பெரிய படமான 'மாஸ்டர்' படம் நல்ல வசூலைக் கொடுத்தது. அதனால், பலரும் தியேட்டர்களிலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார்கள்.
'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் தனுஷ். “விஜய் சாரின் மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் தியேட்டர்களில் படம் பார்ப்பதை இது மீண்டும் ஏற்படுத்தும். தியேட்டர்களில் படம் பார்ப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. தியேட்டர்களில் படம் பார்க்க அனைத்து முன்னெச்சரிக்கையையும் மேற்கொள்ளுங்கள்” என கடந்த மாதம் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இப்போது தனுஷ் தன்னுடைய படத்தையே ஓடிடி தளத்தில் வெளியிடுவது சரியா என்ற கேள்வி தியேட்டர் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் வெளியிடுவாரா என்று எதிர்பார்த்துள்ளார்கள்.




