பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது தான் இப்போதைய புதிய டிரண்ட். அந்த வரிசையில் அடுத்து வில்லனாக நடிக்க இருக்கிறார் விஷால். அதுவும் இங்கல்ல பாலிவுட்டில்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஹீரோயின், அர்ஜூன் வில்லன். பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். விஷால் ராணுவ வீரராகவும், அர்ஜூன் சைபர் க்ரைம் டானாகவும் நடித்திருந்தார். விஷால் கேரக்டருக்கு இணையாக அர்ஜூன் கேரக்டரும் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தின் கதையை மித்ரன் விஷாலிடம் சொன்னபோது அதில் வில்லன் கேரக்டரில் நடிக்கத்தான் விஷால் ஆசைப்பட்டார். ஆனால் மித்ரன் நீங்கதான் ஹீரோ என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் வில்லனாக நடிக்க அப்போது ஆர்யாவிடம் பேசப்பட்டது. அவர் மறுத்து விடவே அதன் பிறகு அர்ஜூன் நடித்தார்.
இப்போது இரும்புத்திரை இந்தியில் ரீமேக் ஆகிறது. விஷால் பிலிம் பேக்டரியும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று தெரிகிறது. இதில் விஷால் நடித்த கேரக்டரில் சல்மான்கானும், அர்ஜூன் நடித்த வில்லன் கேரக்டரில் விஷாலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. காரணம் சல்மான்கான் நடிக்கும் பட்சத்தில் அவர் படத்தின் வில்லனை அவர் தான் தேர்வு செய்வார். இந்தி பேசும் மக்களுக்கு அதிக அறிமுகம் இல்லாத விஷால் நடிக்க அவர் ஒப்புக் கொள்வரா என்று தெரியவில்லை.