மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சூர்யா - ஜோதிகா ஆகிய இருவரும் திருமணத்திற்கு முன்பு, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6, சில் லுன்னு ஒரு காதல் என ஏழு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதிகளான அவர்கள் இதுவரை எந்த படத்திலும் இணையவில்லை.
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் இருந்து ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து கதையின் நாயகியாக தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில், பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா சமீம், சூர்யா-ஜோதிகாவை மீண்டும் இணைக்க ஒரு கதை ரெடி பண்ணி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலையும் அவர்களை சந்தித்து பெற்று விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள ஹலிதா சமீம், ஸ்கிரிப்டை கூடிய சீக்கிரமே முடித்து அவர்களை மீண்டும் ஜோடியாக திரையில் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.