தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தியேட்டர்களுக்கு மீண்டும் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரமே 4 படங்கள் வெளியாகின. வருகிற 12ல் 6 படங்கள் வெளிவருகின்றன. அதில் ஒன்று பழகிய நாட்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுகிறோம் என்கிறார் இயக்குனர் ராம்தேவ்.
அவர் மேலும் கூறியதாவது: வெகு நாட்களுக்கு பிறகு 100 சதவிகிதம் காதல் கதையாக உருவாகி உள்ள பழகிய நாட்கள், காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருவது ஒரு சிறப்பாக நினைக்கிறேன். இப்படம் காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதல் செய்யப் போகிறவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
வெகு நாட்களாக பிரிந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றுசேரும் இத்தருணத்தில் இப்படம் ரிலீஸ் ஆவதால் அவர்களுக்கான புத்துணர்ச்சி படமாக இது அமையும். இப்படத்தை அவர்கள் பெற்றோர்களே பார்க்கச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.
இந்தப் படத்தில் புதுமுகம் மீரான், மேக்னா, ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, வின்சன்ட்ராய், சிவக்குமார் மற்றும் சுஜாதா நடித்திருக்கின்றனர். மணிவண்ணனும், விஜயகுமாரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான், அலெக்ஸ், ஷேக் மீரா, லண்டன் ரூபேஷ் இசை அமைத்துள்ளனர்.