பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
5 வயதிலிருந்து தான் ஆஸ்துமா நோயுடன் போராடுவதாகவும், கையில் எப்போதும் இன்ஹேலர் வைத்துக் கொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 5 வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டேன்.
இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். நான் இன்ஹேலர் உபயோகப்படுத்தும்போது என்னை ஒருவிதமாக பார்ப்பார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும். என்கிறார் காஜல் அகர்வால்.