ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஓடிடி வெளியீடு பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கோவில்பட்டி சென்றுள்ள செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பதாவது:
திரையரங்குகளில் படம் ஓடும் போது ஓடிடியில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சில திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியிடப்பட்டன. இதனை தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது. திரையரங்குகளில் ஓடிய பின்னர் ஓடிடியில் வெளியிடலாம். முதல் ரீலிஸ் திரையரங்குகளிலும், 2வது ரீலிஸ் ஓடிடியிலும் வெளியிடலாம். ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து ஓடிடியில் வெளியிட வேண்டும். . நகரத்தில் உள்ள மக்களுக்கு ஓடிடியில் பார்க்கும் வசதி இருக்கும். கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி கிடையாது.
திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். 3 பேரும் இப்பிரச்சினை தொடர்பாக அமர்ந்து பேச வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறியிருக்கிறார்.