2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய மால் ஒன்றில் scary house எனப்படும் பேய்வீடு செட் அமைத்து பார்வையாளர்களுக்கு 'த்ரில்' வழங்கும் வேலையை செய்து வருகின்றனர் நாயகனும் நாயகியும். இந்த வீட்டில் நிஜமான பேய் ஒன்று நுழைவதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளையும் காமெடி, த்ரில் என கலந்து படமாக்கியுள்ளார்கள். பேய்க்கான பிளாஸ்பேக்கும் இதுவரை சொல்லப்படாத ஒன்றாக இருக்கும்
நாயகன் ராஜாஜி இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடத்திற்காக மொட்டையெல்லாம் அடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது. விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.