ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இசை அமைப்பாளர்கள் நடிகர்கள் ஆவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி சமீபத்திய வரவுகள். விரைவில் யுவன் சங்கர் ராஜா, அனிருத் நடிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ் நடிகர் ஆகிறார்.
கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது .