வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! |
நடிகர் விமலின் மனைவி அக்ஷயா சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், விமல் மீது தஞ்சையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகாரில், மன்னர் வகையறா படத்தை தயாரிக்க, தனது வீட்டை அடமானம் வைத்து விமலுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி விட்டதாகவும், தற்போது தான் நடுத்தெருவில் நிற்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விமல் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என் மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.
திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்” என விமல் கூறி இருக்கிறார்.