பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் தீ இவன். இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக் முத்துராமன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெராரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பது தான் தமிழர்களின் உச்சபட்ச நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என்கிறார்.