சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கொரோனா கொடுங்காலம் முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது. உலக நாடுகள் ஒவ்வொன்றாக மீண்டும் ஊரடங்கை அறிவிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த ஹாலிவுட் படங்களும் வரிசையாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படமே துரத்தல் கதையை கொண்டது. அந்த படத்தையே துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா. 8 பாகங்களை வெற்றிகரமாக முடித்த இந்த படத்தின் 9வது பாகம் தான் கொரோனாவிடம் சிக்கித் தவிக்கிறது. இந்த படத்தில் வின் டீசல், ஜான் சீனா, மிச்சல் ரோட்ரிகெஸ், டைரீஸ் கிப்சன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஒரு வருடம் கழித்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வராத காரணத்தால் மே 28 அன்று ஒத்திவைக்கப்பட்டதாக யுனிவர்சல் நிறுவனம் அறிவித்தது.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓராண்டு காத்திருந்த ரசிகர்கள் தற்போது இப்படம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.