பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கிரித்தி சனோன். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ் நடிக்க, ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் கிரித்தி சனோன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். லட்சுமணன் வேடத்தில் சன்னி சிங் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது பற்றி கிரித்தி, “ஆதி புருஷ் படம் எனக்கு மிகவும் சிறப்பானது, பெருமையானது. இந்த மாய உலகத்தில் நடிப்பதில் இருக்கும் உற்சாகத்தை மீறி அதை மரியாதையாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த '1 நேனொக்கடைன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன்பின் 'ஹீரோபன்டி' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
2015ல் வெளிவந்த 'டோச்சே' தெலுங்குப் படத்திற்குப் பிறகு ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க வந்துள்ளார். 'ஆதி புருஷ்' படம் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.