பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் |
ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். விக்ரமின் 60வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் தற்போது இணைந்துள்ளார்.
ஏற்கனவே சாமி படத்தில் விக்ரமுக்கு வில்லனாக மோதிய பாபி சிம்ஹா, இந்தப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. காரணம் கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான நடிககர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, அவரது பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறார். அந்தவகையில் இந்த கூட்டணி இப்போது விக்ரம் படத்திலும் தொடர்கிறது.