தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் த்ரிஷா. 2018ம் ஆண்டில் வெளிவந்த '96' படத்தின் மாபெரும் வெற்றி அவருடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து வைக்கும் எனப் பலரும் கருதினார்கள்.
அது போலவே நான்கைந்து படங்களில் முதன்மைக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அவற்றில் 'பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படங்களின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
தற்போது அந்த மூன்று படங்களில் 'பரமபத விளையாட்டு' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேசி முடித்துவிட்டார்களாம். அடுத்த மாதம் வெளியாகும் எனச் சொல்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது படக்குழுவினர் த்ரிஷா இப்படத்தின் பிரமோஷன் எதற்கும் வர மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
மீதி இரண்டு படங்களான 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களின் நிலை என்னவென்பது தெரியவில்லை. த்ரிஷாவின் அடுத்த பெரிய வெளியீடாக 'ராங்கி' படம் இருக்கலாம்.