போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

அமெரிக்காவில் இருந்து வந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்து வருகிறவர் அகிலா நாராயணன். அவர் நேற்று வெளியான காதம்பரி படத்தின் மூலம் நடிகை ஆகியிருக்கிறார். இசையில் ஆர்வம் இருந்தாலும் நடிப்பிலும் ஆர்வம் இருக்கிறது. இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையும், நடிப்பும் என் இரு கண்கள். இசை கற்றுக் கொண்டே நடிக்கவும் செய்கிறேன். தனி இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறேன். இசைக்கென்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கும் திட்டமும் இருக்கிறது. 4 வயதிலிருந்தே பாடி வருகிறேன். பல அழகிப் போட்டிகளில் டைட்டில் பெற்றிருக்கிறேன். இந்த இரண்டும் தான் என்னை இசை மீதும், நடிப்பின் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்தது. ரஹ்மான் சார் பள்ளியில் தற்போது மேற்கத்திய இசை பயிற்சி பெற்று வருகிறேன். 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு இசை பயிற்சியும் அளித்து வருகிறேன். விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறேன். இசை மற்றும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கிறேன் என்கிறார் அகிலா.