சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

டூலெட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஷீலா ராஜ்குமார். திரவுபதி படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். அவர் நடித்துள்ள மண்டேலா விரைவில் வெளிவர இருக்கிறது. மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்தார். இந்த நிலையில் ஷீலா,ஜோதி என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். அவருடன் 8 தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆப் காதல் படங்களில் நடித்த வெற்றி நடித்துள்ளார். இவர்கள் தவிர கிரிசா குரூப், சரவணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எஸ்.பி.ராஜாசேதுபதி தயாரித்து உள்ளார். திரைப்பட கல்லூரி மாணவர் கிருஷ்ணபரமாத்மா இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: பத்ரிகையில் வெளிவந்த ஒரு உண்மை சம்பவத்தை திகில் படமாக உருவாக்கி உள்ளோம். 33 நாட்களில் ஒரே கட்டமாக படத்தை முடித்து விட்டோம், விரைவில் திரைக்கு வருகிறது. என்றார்.