ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் தயாராகி, தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'கேஜிஎஃப் சாப்டர் 1'. யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தில் இந்த படத்தின் கதையை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பில்டப்புடன் சொல்பவராக நடித்திருந்த நடிகர் அனந்த் நாக் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்றுதான் ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்ததால், அதை ஏற்க மறுத்து, அனந்த் நாக் விலகிவிட்டார் என்றும், அவருக்கு பதிலாகத்தான் அந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் அவரது கதாபாத்திர பெயரை வெளியிட்டு, அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தனர் படக்குழுவினர். படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பெயர் விஜயேந்திர இங்கல்ஜி. இந்த தகவல் மூலம் ஒரு மிகப்பெரிய சந்தேகம் தற்போது விலகியுள்ளது என்றே சொல்லப்படுகிறது.
அதாவது முதல் பாகத்தில் அனந்த் நாக் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஆனந்த் இங்கல்ஜி.. அதுமட்டுமல்ல பிரகாஷ்ராஜ் தற்போது நடிப்பது வக்கீல் கதாபாத்திரத்தில்.. ஆனால் அனந்த் நாக் நடித்திருந்தது ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில். அதனால் இந்தப்படத்தில் அனந்த் நாக்கும் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கான பெயர் ஒற்றுமையில் ஏதேனும் ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..