'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. தற்போது ஆந்திர அரசியலில் பிஸியாக உள்ளார். அதோடு தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஜாவிற்கு இரண்டு ஆபரேஷன்கள் நடந்துள்ளன. இதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னையில் இந்த ஆபரேஷன் நடத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி ரோஜாவின் கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ‛‛ரோஜாவிற்கு கடந்தாண்டே இந்த ஆபரேஷன் நடக்க வேண்டியது. ஆனால் அவர் அரசியலில் பிஸியாக இருந்ததாலும், கொரோனா பிரச்னையாலும் தாமதமானது. இப்போது நல்லபடியாக இரண்டு ஆபரேஷன்கள் நடந்து முடிந்துள்ளன. கடவுள் அருளால் தற்போது அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு வார காலங்கள் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து அவரது உடல்நிலைப்பற்றி அவ்வப்போது ரசிகர்களுக்கு சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.