மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். அடுத்து ஒரு படத்தை இவர் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக இவரது மருமகன் ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்கிறார். இப்படத்தை பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ், கடந்தாண்டு சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.