மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பீட்சா, சூது கவ்வும், தெகிடி, அட்டகத்தி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 4ஜி, டைட்டானிக், காதலும் கவுந்து போகும் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மாயவன் 2ம் பாகத்தை இயக்கவும் உள்ளார்.
இதற்கிடையில் சி.வி.குமார் கொற்றவை என்ற பேண்டசி படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். 3 பாகமாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதுகிறார்.
படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது: வரலாற்றில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை மையப்படுத்தி இந்த படம் தயாராகிறது. வரலாற்று காலம், நிகழ்காலம் என மாறி மாறி கதை பயணிக்கும். புதையல் வேட்டை தொடர்பான பேண்டசி கதை. அனைத்து விதமான சுவாரஸ்யங்களும் நிறைந்த படமாக இருக்கும். 3 பாகங்களாக படம் வெளிவருகிறது. முதல் பாகத்துக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்தடுத்த பாகங்கள் உரிய இடைவெளியில் வெளியாகும். முதல் இரண்டு பாகத்தின் கதைக்கான கிளைமாக்சாக 3வது பாகம் இருக்கும். என்றார்.