கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

நடிகர் விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் விவேக்(59). ‛மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
![]() |
இந்நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று காலையில் பேசி கொண்டிருந்த போது, லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். விவேக்கிற்கு மாரடைப்பபு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதய செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர் காக்கும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருப்பதாக நேற்று டாக்டர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் பிரார்த்தனை செய்து வந்தனர்.
![]() |
இந்நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. சீக்கிரம் குணமாகி மீண்டும் மக்களை சிரிக்க வைப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தது தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட கொரோனா தடுப்பூசி போடுங்க என விழிப்புணர்பு ஏற்படுத்தி சென்றவர் இன்று இல்லை என யாராலும் நம்பமுடியவில்லை. காலையில் எழுந்த பலருக்கு இந்த செய்தி நிச்சயம் பெரும் அதிர்ச்சியே. விவேக்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தடுப்பூசியால் பாதிப்பில்லை
முன்னதாக நேற்று விவேக் உடல்நிலை குறித்து சிம்ஸ் டாக்டர்கள் விளக்கம் அளித்தபோது தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். அவர் கூறுகையில், ‛‛நடிகர் விவேக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. அவர், தானாக முன்வந்து, கொரோனா தடுப்பூசி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசியால், மாரடைப்பு ஏற்படவில்லை. மருத்துவ ரீதியாக, ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில், 2.17 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவரது உடல்நிலை பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
![]() |
விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விவேக்கின் உடலக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பலர் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது மரக்கன்றுகளை ஏந்தி சென்றனர்.
![]() |