பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அனில் பூபதி இயக்கத்தில் சர்வானந்த், சித்தார்த், அதித் ராவ் ஹைதரி, அனு இம்மானுவேல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மகா சமுத்திரம்'. இப்படத்தை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தில் சர்வானந்த் கதாபாத்திரத்தின் முதல் பார்வையை கடந்த மாதம் அவருடைய பிறந்தநாளன்று வெளியிட்டார்கள். நேற்று இப்படத்தின் மற்றொரு நாயகனான சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய கதாபாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் மூலம் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்குத் திரையுலகத்திற்குள் நுழைகிறார் சித்தார்த். இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு, “இதற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். மீண்டும் வருவது மகிழ்ச்சி, என் மீது வைத்துள்ள அன்புக்காகவும், எதிர்பார்ப்புக்காகவும் மிக்க நன்றி. உங்களை விரைவில் தியேட்டர்களில் பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், தன்னுடைய டிவீட்டில் தெலுங்கு ரசிகர்களைக் கவர மட்டும், 'வஸ்துனா, வச்சேஸ்துனா, வச்சேசா' எனத் தெலுங்கு வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த். தமிழ் ரசிகர்களுக்காக ஒன்றுமே சொல்லவில்லை. ஒருவேளை தெலுங்கில் மட்டும் எடுக்கப்படும் படமோ ?.