ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
மறைந்த நகைச்சவை நடிகர் விவேக் அவருடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடித்ததில்லை. அவருடைய அந்த ஆசை நிறைவேறியும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சிக்கலில் நிற்கிறது. இயக்குனர் ஷங்கருக்கும் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கம் இடையே மோதல் உருவாகி நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றுவிட்டது.
இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜுலை முதல் அக்டோபர் வரை நேரம் இருக்கிறது, அப்போது படத்தை முடித்துக் கொடுக்க முயற்சிக்கிறேன் என ஷங்கர் பதிலளித்துள்ளார். அதோடு, படத்தில் விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
விவேக் நடித்த காட்சிகள் முழுமையாகப் படமாகவில்லை என்பது இதனால் தெரிய வருகிறது. அதன் காரணமாக அவர் நடித்த காட்சிகளை வேறொரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க உள்ளதாகவும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கமல்ஹாசனுடன் நடிக்காமல் இருந்த அவரது ஆசை இந்தியன் 2 படம் மூலம் ஓரளவிற்கே நிறைவேறியுள்ளது. இப்போது அது படத்தில் இடம் பெற முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் அதன் படப்பிடிப்பு மீண்டும் நடந்திருந்தால் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கும்.
தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக ஒரு வருடமாக படப்பிடிப்பும் நடக்காமல் போனதால் விவேக்கின் ஆசை நிராசையாகவே முடியப் போகிறது என்பது வருத்தமே.