மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. அரசும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. என்றாலும் ஒரே மூச்சில் படத்தை முடித்து விட வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது கவுதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு.
ஶ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்க, பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார். ஷிவத்மிகா ராஜசேகர் ஹீரோயின். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் கூறியதாவது: ஆனந்தம் விளையாடும் வீடு படம் உருவாகி வரும் விதம், மனதிற்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி கதையை என்னிடம் கூறியதுபோலவே, படத்தையும் மிக அழகாக செதுக்கி வருகிறார்.
குறிப்பாக சேரன் மற்றும் கவுதம் கார்த்திக் பங்குபெறும் காட்சிகள் மிக அற்புதமாக உருவாகியுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திண்டுக்கல் பகுதியில் துவங்கியுள்ளோம். குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைப்படத்தில், பல பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதுவும், படப்பிடிப்பில் குடும்ப உறவைகளை போலவே பழகுவதும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
திண்டுக்கல் மக்களும் தங்கள் குடும்பத்தினரை போலவே படக்குழுவை கொண்டாடியது படத்தினை திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனும் நம்பிக்கையை கூட்டியுள்ளது. பொதுமுடக்கம் முற்றிலும் நீங்கிய பிறகு, செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் பொழுதுபோக்கு அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக ரசிகர்களுக்கு இப்படத்தை தருவோம். என்றார்.