துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் உலக அளவில் வசூலை வாரிக் குவிக்கும். இந்தப் படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதுவரை கேப்டன் அமெரிக்கா : பர்ஸ்ட் அவெஞ்சர், கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர். கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன.
இந்த பாகங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிரிஸ் ஈவன்சின், எல்லா சூப்பர் ஹீரோக்களும் இணைந்து நடித்த அவென்ஞர் எண்ட் கேம் படத்தில் தனது அமெரிக்க கேப்டன் பொறுப்பை சாம் வில்சனிடம் கொடுத்துவிட்டு தான் ஓய்வு பெறப்போவதாக கூறியிருப்பார்.
அந்த அடிப்படையில் அடுத்து தயாராகும் 4ம் பாகத்தில் அமெரிக்க கேப்டனாக சாம் வில்சன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. வெள்ளையர்கள் நிறைந்த நாட்டில், ஒரு காலத்தில் நிறவெறி மிகுந்த ஒரு நாட்டின் கேப்டனாக ஒரு கருப்பினத்தவர் நடிப்பது அமெரிக்காவின் இமேஜை உலக அளவில் உயர்த்தும் என்று கூறப்படுகிறது.