சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்த ரைசா, சமீபத்தில் கண்களின் கீழே கருத்துப்போய், வீங்கிய முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, பக்க விளைவு காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவரை குற்றம் சாட்டியதுடன் மேலும் தனக்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தோல் மருத்துவர், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர் தான், தனது பெயரையும் புகழையும் கலங்கப்படுத்தியதற்காக தனக்கு மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் அளித்த சிகிச்சையில் இதுபோன்ற பக்க விளைவுகள் முதலில் ஏற்படுவது சகஜம் என்றும் ஒருசில நாட்களில் இவை மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது மது அருந்தாமல், புகை பிடிக்காமல், வலுவான உடற்பயிற்சிகள் செய்யாமல்... என சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா அதை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.