2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சாம்ஸ் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஆபரேஷன் ஜுஜுபி படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார். இதில் அவர் காமெடி ஹீரோவாக நடிக்கவில்லை. சீரியசான ஹீரோவாக நடிக்கிறார். படத்தை அருண்காந்த் இயக்குகிறார். இப்படத்தில் சாம்ஸுக்கு மனைவியாக வினோதினி வைத்தியநாதன் நடித்திருக்கிறார். இவர்களுடன், படவா கோபி, ராகவ், ஜெகன்,சந்தானபாரதி, வெங்கட் சுபா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த் கூறியதாவது: இது எனக்கு 3வது படம் ஏற்கெனவே கோக்கோ மாக்கோ, இந்த நிலை மாறும் படங்களை இயக்கி இருக்கிறேன். சாம்ஸை முதல் முறையாக ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை சர்வசாதாரணமாக கையாளுவது தான் கதை. அதனால் தான் படத்திற்கு ஆபரேஷன் ஜுஜுபி என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
இது பேண்டஸி அரசியல் திரைப்படமாகும். ஒரு தனி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்காக ஒரு நாடு உருவாக வேண்டும், என்ற சாமாணிய மக்களின் கனவு தான் படத்தின் கதை கரு. படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. என்றார்.