23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
அனைத்து பணிகளும் முடிந்து வெளிவர முடியாமல் இருக்கும் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கென்று தனியாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளர்குளுக்கு உதவும் பொருட்டு நன்கொடை வசூலிப்பது, தயாரிப்பாளர்களின் குடும்ப திருமண செலவு, பள்ளி, கல்லூரி கட்டண செலவுகளை சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டும் பணிக்கு பொருளாளார் சந்திர பிரகாஷ் ஜெயின் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பதிவு செய்யப்பட்ட படங்களின் தலைப்புக்கு செயற்குழு ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.