23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட பட நிறுவனம் அறிவித்து விட்டதால் கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத்தில் முகாமிட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பலத்த பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்பயிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சென்னை வரும் ரஜினி, வந்த வேகத்தில் தனக்கான டப்பிங் வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ரஜினி வேகம் காட்டி வருவதால், தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.