சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, தி பேமிலி மேன்-2 என்ற வலைதொடரிலும் நடிக்கிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் பயங்கரவாதி வேடத்தில் நடித்துள்ள சமந்தா, இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த தொடரின் டீசரில் சமந்தாவின் தோற்றம் வெளியிடப்பட்டது. அதிலிருந்து அவரது கேரக்டர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. இந்நிலையில் தற்போது தி பேமிலி மேன்-2 தொடர் ஜூன் 11-ந் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் வெளியாகும் இந்த வெப் தொடரில் மனோஜ் பாஜ்பாய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.