300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர்'. இந்தப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தணிக்கை குழுவினரிடம் இருந்து 'யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது... கடந்த ஏப்ரல் மாதமே சென்சார் செய்யப்பட்டு விட்டாலும், தற்போது தான் சான்றிதழ் குறித்த விபரம் கசிந்துள்ளது.
இது சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு சற்று அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.. காரணம் சிவகார்த்திகேயன் இதுநாள் வரை நடித்த படங்களில் முதன்முறையாக யு/ஏ சான்றிதழ் பெறுவது இந்தப்படம் தான்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும், எப்போதுமே குழந்தைகளை கவரும் விதமாகவே உருவாக்கப்பட்டு வருவதால் இதுநாள் வரை அவரது படங்களுக்கு யு சான்றிதழ் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் டாக்டர் படத்தில் உச்சபட்ச ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் படம் 2 மணி 28 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.