உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் | ஹீரோயின் ஆனார் சேஷ்விதா கனிமொழி | 37 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் மாலாஸ்ரீ மகள் | பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம் | நவம்பர் மாதத்தில் ராஜமவுலி, மகேஷ்பாபு பட அப்டேட் |
சுசீந்திரன் இயக்க, ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ஒரு படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் முடிவடைவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது. என்றாலும் ஈஸ்வரன் படத்திற்கு பிறகு இதனை தியேட்டரில் வெளியிடலாம் என்று கருதி இருந்தார்கள். ஆனால் தற்போது கொரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இதே போல சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இன்னொரு படமான ஷிவா ஷிவா என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தின் மூலம் ஜெய் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.