திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூடி ஒரு மாத காலம் ஆகப் போகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட கொரோனா பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வரும் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை சுமார் எட்டு மாதங்கள் கழித்து நவம்பர் மாதத்தில்தான் திறந்தார்கள். முதல் முறை கொரோனா பரவல் என்பதால் தியேட்டர்களைத் திறக்க மிகவும் தயக்கம் காட்டினார்கள். அதற்கேற்றால் போல மக்களும் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லை.
இந்த இரண்டாவது அலை எப்போது குறையும் என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரமும் அதிகமாக இருக்கிறது.
மக்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகுதான் கொரோனா பரவலின் தாக்கம் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்னமும் மக்கள் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்காமல் கடைகளுக்குச் செல்கிறோம் என்று சொல்லி காலை 10 மணி வரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இபப்போதுள்ள சூழலில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்தாலும் எப்படியும் இரண்டு, மூன்று மாதங்கள் வரை ஆகும் என்றே சொல்கிறார்கள். அப்படி குறைந்தாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் தியேட்டர்களை நிச்சயம் திறக்க மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி அங்கு தசரா பண்டிகை வரும் அக்டோபர் மாதத்தில் வேண்டுமானால் தியேட்டர்களைத் திறக்கலாம் என்கிறார்கள். இல்லை கடந்த வருடம் போலவே தீபாவளி சமயத்தில் வேண்டுமானால் தியேட்டர்களைத் திறந்தாலும் திறக்க வாய்ப்புள்ளது. அதுகொரோனா குறைவதைப் பொறுத்தே உள்ளது.