துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த லலித்குமார் தயாரிப்பில் மீண்டும் நடிக்க உள்ளார். இப்படம் விஜய்யின் 66வது படமாக அமையும்.
அதற்குப் பிறகு அவர் நடிக்க 67வது படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க உள்ளாராம். கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கப் போகிறாராம்.
இப்படத்தைத் தெலுங்கிலும் நேரடியாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அது மட்டுமல்ல பான்-இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடும் எண்ணம் உள்ளதாம். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படமும் தெலுங்கு, ஹிந்தியில் வெளியானது. ஆனால், தெலுங்கில் மட்டும் தான் வெற்றி பெற்றது. ஹிந்தியில் படுதோல்வி அடைந்தது.