தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்தியன் 2 படம் பல காரணங்களால் திட்டமிட்டபடி முடிவடையாமல் தாமதமாகி வந்ததால், ராம் சரண் நடிப்பில் ஒரு தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் ஹிந்தி ரீமேக்கையும் இயக்க தயாரானார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால் இந்த செய்தி வெளியானதுமே இந்தியன்-2வை முடித்த பிறகுதான வேறு படத்தை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். அதையடுத்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஷங்கர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஷங்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று டோலிவுட், பாலிவுட் பிலிம் சேம்பர்களுக்கும் லைகா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இப்படியான நிலையிலும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியாபட் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.