போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா ஹெலனுக்கு அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி ஓவியா ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் அவர் டாப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து களவாணி 2 படம் மட்டுமே அவர் நடித்து வெளியே வந்தது. அந்த படமும் ஓடவில்லை. ஆனபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கிறார். இந்தநிலையில், தற்போது தனது டுவிட்டரில் மீடூ குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்பது எனக்கு புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த விசயத்தை மனதில் கொண்டு இப்படியொரு டுவீட்டை ஓவியா ஹெலன் தற்போது பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.