இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் காளி வெங்கட். மெர்சல், தெறி, மாரி, மாரி 2, கொடி, ஈஸ்வரன், சூரரைப்போற்று, வேலைக்காரன், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
காளி வெங்கட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனை கிடைக்காமல் வீட்டிலேயே தனித்திருந்து குணமடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 22 நாட்கள் அறிகுறிகள் இருந்தன. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன். மருத்துவமனையில் சேர்ந்து சிகிக்சை பெற வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக தேடியபோது மருத்துவமனை கிடைக்கவில்லை. போன மாதம் தான் இது நடந்தது. அதன்பின் டாக்டர் ஒருவரின் உதவியோடு உரிய சிகிச்சை எடுத்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். கொரோனா வராமல் பார்த்துக்கொள்வது தான் முக்கியம். பதற்றமாக கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால கொரோனா வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வந்தால் பயப்பபடாதீர்கள், அதே நேரத்தில் அலட்சியப்படுத்தவும் செய்யாதீர்கள். இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.