ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி |
சூரரைப்போற்று படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படங்களைப்போன்று இந்த படத்தையும் கிராமத்து கதையில் இயக்குகிறார் பாண்டிராஜ்.
என்றாலும் இந்த படம் குறித்த அப்டேட்களை வெளியிடாமல் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா-40 படம் குறித்து பாண்டிராஜிடத்தில் கேள்வி எழுப்பினர். அப்போது, கார்த்தியை வைத்து நான் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தைப்போலவே இந்த படமும் இருக்கும். அந்த படத்தை எப்படி நீங்கள் கொண்டாடினீர்களோ அதேபோல் இந்த படத்தையும் கொண்டாடுவீர்கள். அப்படியொரு படமாகத்தான் சூர்யா-40வது படமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.