மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

ராஜ் - டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் தி பேமிலிமேன்-2. இதுவரை சினிமாவில் மட்டுமே நடித்து வந்துள்ள சமந்தா முதன்முதலாக இந்த தொடர் மூலம் வெப்சீரியலுக்கு வந்துள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் இணைந்து சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த தொடரின் டிரெய்லர் வெளியானபோது விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளைப்போன்று சித்தரிக்கப்பட்டு அந்த தொடர் தயாரிக்கப்பட்டிருப்பதை அறிந்து தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதோடு சமந்தாவும் பயங்கரவாத தமிழ்ப்பெண்ணாக நடித்துள்ளார்.
இதையடுத்து, தி பேமிலிமேன்-2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழர்களுக்கு எதிரான எந்த விசயமும் இந்த தொடரில் இல்லை. இது வெளியான பிறகு நீங்களே கொண்டாடுவீர்கள் என்று தொடரின் இயக்குனர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற பரபரப்பான சூழல் காரணமாக இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே சோசியல் மீடியாவிலும், மீடியாக்களிலும் பப்ளிசிட்டி செய்து வந்த சமந்தா, தற்போது சோசியல் மீடியாவிலும் தி பேமிலிமேன்-2 தொடர் குறித்த கருத்துக்களை வெளியிடாமல் உள்ளார். இந்த சர்ச்சை குறித்து சில மீடியாக்கள் தன்னை பேட்டிக்காக அழைத்தபோதும் மறுத்து விட்டாராம். மீடியாக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் பதிலளித்தால் அது இன்னும் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடும் என்பதற்காக அவர் அமைதி காத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.