சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவியது. தற்போது அதன் தாக்கம் சிறிது குறைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சிலர் வேறு வழிகளில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், சுமார் 3 ஆயிரம் திரைப்பட தொழிலளார்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதி வழங்குகிறார். இது தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.
இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை.
இவ்வாறு யஷ் தெரிவித்துள்ளார்.